அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை


அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை
x
தினத்தந்தி 17 Jan 2023 6:45 PM GMT (Updated: 17 Jan 2023 6:47 PM GMT)

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி தாலுகா கிருங்காக்கோட்டை கிராமத்தில் கருப்பர் சுவாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. கோகுல கிருஷ்ணா யாதவா அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் அகிலா கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் சரண்யா ஸ்டாலின் முன்னிலை வகித்தார். கிருங்காக்கோட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுத்த 6 மாணவ- மாணவியர்களுக்கும், மற்றும் சங்க உறுப்பினர்களின் 12 மாணவ -மாணவியர்களுக்கும் பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் கல்வி ஊக்கத்தொகையாக தலா ரூ.2 ஆயிரம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது, மேலும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ மாணவியர்களுக்கும் பாராட்டு நற்சான்றிதழ் வழங்கப்பட்டன.

விழாவில் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பில் மருந்துகள் வழங்கப்பட்டது. இறந்த உறுப்பினர் குருநாதன் குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் காசி தலைமையிலும், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் துரைராஜன் முன்னிலையிலும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோகுல கிருஷ்ணா யாதவ அறக்கட்டளை தலைவர் இளையராஜா, செயலாளர் சுந்தரம், பொருளாளர் பாரிதாசன் ஆகியோர் செய்திருந்தனர். அறக்கட்டளை செயலாளர் சுந்தரம் பேசுகையில், விரைவில் சேவா சங்கத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழா நடத்துவது எனவும், வெள்ளி விழாவில் சாதனை பொக்கிஷ மலர் வெளியீடு செய்ய இருப்பதாக கூறினார். முடிவில் அமைப்பு செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.


Next Story