ரூ.17¾ லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் திறப்பு


ரூ.17¾ லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் திறப்பு
x
தினத்தந்தி 20 April 2023 6:45 PM GMT (Updated: 20 April 2023 6:46 PM GMT)

வேதாரண்யம் அரசு பள்ளியில் ரூ.17¾ லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் திறப்பு

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகர், 3-ம் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 129 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டில் 64 மாணவர்களும், 70 மாணவிகளும் என மொத்தம் 134 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உபரி நிதியில் இருந்து ரூ.17.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறைகளை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைத்தார். தொடர்ந்து ஆண்டு விழாவையெட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, துணைத்தலைவர் மங்களநாயகி ராமச்சந்திரன், வருவாய் கோட்ட அலுவலர் மதியழகன், ஒன்றியக்குழு தலைவர் கமலாஅன்பழகன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் உதயம்முருகையன், வேதாரண்யம் ஒன்றிய ஆத்ம குழு தலைவர் சதாசிவம், தலைமை ஆசிரியை செந்தமிழ்செல்வி, வர்த்தக சங்கத்தலைவா் தென்னரசு, பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவா் குணசேகரன், ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story