தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.1.22 கோடிக்கு சமரச தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.1.22 கோடிக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 12 Aug 2023 7:00 PM GMT (Updated: 12 Aug 2023 7:00 PM GMT)

தூத்துக்குடியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.1.22 கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி எம்.செல்வம் தலைமை தாங்கினார். இதில் சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

இந்த வழக்கு விசாரணையில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 179 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் 24 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த சமரச தீர்வு தொகை ரூ.1 கோடியே 22 லட்சத்து 692 ஆகும். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான (பொறுப்பு) ஏ.பிஸ்மிதா, முதுநிலை நிர்வாக உதவியாளர் எஸ்.தாமரை செல்வம், இளநிலை நிர்வாக உதவியாளர் இசக்கியம்மாள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


Next Story