தென்மாவட்ட ரெயில்களில், பெட்டிகள் எண்ணிக்கையில் மாற்றம்


தென்மாவட்ட ரெயில்களில், பெட்டிகள் எண்ணிக்கையில் மாற்றம்
x
தினத்தந்தி 4 July 2023 9:17 PM GMT (Updated: 4 July 2023 9:21 PM GMT)

தென்மாவட்ட ரெயில்களில், பெட்டிகள் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை


தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட தென்மாவட்டங்களில் இயக்கப்படும் ஒரு சில ரெயில்களின் பெட்டிகளின் எண்ணிக்கையில் பின்வருமாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக ஓகா வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.1673316734) வருகிற 28-ந் தேதி முதல், 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 8 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் மற்றும் ஒரு சமையலறை பெட்டி ஆகியன இணைக்கப்பட்டு இருக்கும்.

கோவை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.1661816617) அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 7 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.

சென்னையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.1266712668) அடுத்த மாதம் 3-ந் தேதி முதல், ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 12 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள், 2 பார்சல் பெட்டியுடன் இணைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.

தென்மத்திய ரெயில்வே மண்டலம் சார்பில் இயக்கப்படும் நாகர்கோவில்-கச்சிக்குடா வாராந்திர சிறப்புக்கட்டண சிறப்பு ரெயிலில் (வ.எண்.0743507436) வருகிற 7-ந் தேதி முதல் 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 4 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.


Related Tags :
Next Story