கும்பகோணத்தில், பூக்களின் விலை கடும் வீழ்ச்சி


கும்பகோணத்தில், பூக்களின் விலை கடும் வீழ்ச்சி
x

கும்பகோணத்தில், பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

தஞ்சாவூர்

தொடர் மழையால் கும்பகோணத்தில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர் மழை

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைத்துள்ளது. ஆனாலும் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இந்த மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் மழையின் காரணமாக கும்பகோணம் மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பூ வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

விலை கடும் வீழ்ச்சி

இதுகுறித்து பூ வியாபாரி சேட்டு கூறுகையில், தற்போது பூக்கள் சீசன் அதிகரித்து விட்டது. குறிப்பாக மல்லி, முல்லை பூக்கள் திருவண்ணாமலை, வேதாரண்யம், சுந்தரபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து விற்பனைக்கு அதிக அளவில் வருகின்றன. கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பூக்களின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.

இந்த நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து பூக்களின் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் சாதாரணமாக கிலோ 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் மல்லி, முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது மல்லி கிலோ ரூ. 350- க்கும், முல்லை கிலோ ரூ.200-க்கும் விற்பனையாகிறது. மற்ற பூக்களின் விலையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பூக்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.


Next Story