சின்னசேலத்தில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


சின்னசேலத்தில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:45 PM GMT)

சின்னசேலத்தில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

தமிழ்நாடு பணி மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்ததை கண்டித்து நேற்று சின்னசேலம் தனியார் பள்ளி முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக் பேரமைப்பு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடராசன் தலைமை தாங்கினாா். வட்டார செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், சரவணன், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சின்னசேலம் ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story