அந்தியூர் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி


அந்தியூர் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
x

அந்தியூர் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

பறவைகள் கணக்கெடுப்பு

அந்தியூர் வனப்பகுதியில் உள்ள பறவைகளின் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடைபெறும். அதேபோல இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணி 2 நாட்கள் நடைபெற்றன. அந்தியூர் வனச்சரகர் உத்தரசாமி தலைமையில் தன்னார்வு தொண்டு நிறுவனத்தினர், வனத்துறையினர் என 10 குழுக்களாக பிரிந்து இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

40-க்கும் மேற்பட்டவை

நவீன தொலைநோக்கி கேமரா மூலம் மரத்தில் அமர்ந்து இருக்கும் பறவைகள், நிலப்பகுதியில் வாழும் பறவைகள், வனப்பகுதியிலும் வனத்தை ஒட்டிய கிராமப்புறங்களிலும் வாழும் பறவைகள் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டது. அப்போது சாம்பல் நிற இருவாட்சி, இந்திய குளத்து கொக்கு, நீர் காகம், முக்குளிப்பான், தேன் சிட்டு, பச்சை புறா, சிகப்பு மூக்கு ஆள் காட்டி போன்ற 40-க்கும் மேற்பட்ட பறவை இன வகைகள் காணப்பட்டன.

இதுகுறித்து கணக்கெடுப்பு குழுவினர் கூறும்போது, 'கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக பறவைகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் அந்தியூர் வனப்பகுதி மற்றும் வனத்தை ஒட்டிய கிராமப் பகுதியில் பறவைகளுக்கு தேவையான உணவு தண்ணீர் கிடைக்கிறது. இதனால் பறவைகள் அதிக எண்ணிக்கையில் இப்பகுதியில் வசித்து வருகின்றன' என்றனர்.


Related Tags :
Next Story