சூளகிரி அருகே பழ வியாபாரி கொலை:நண்பருக்கு 10 ஆண்டு சிறை தண்டனைஓசூர் கோர்ட்டில் தீர்ப்பு


சூளகிரி அருகே பழ வியாபாரி கொலை:நண்பருக்கு 10 ஆண்டு சிறை தண்டனைஓசூர் கோர்ட்டில் தீர்ப்பு
x

சூளகிரி அருகே பழ வியாபாரி கொலை வழக்கில் அவரது நண்பருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

சூளகிரி அருகே பழ வியாபாரி கொலை வழக்கில் அவரது நண்பருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பழ வியாபாரி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அருகே உள்ள கோட்டங்கிரி பகுதியை சேர்ந்தவர் சென்ராஜப்பா (வயது 42). இவரது மனைவி சின்னம்மா (35). இவர்களுக்கு மகேஷ் (14) என்ற மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியை பிரிந்து பெங்களூருவில் தங்கி பழ வியாபாரம் செய்து வந்தார். இவர், மாதத்திற்கு ஒருமுறை, கோட்டங்கிரியில் உள்ள தனது அண்ணன்கள் சீனப்பா (47), முனிசந்திரப்பா (45) ஆகியோர் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதே போல் கடந்த 27-12-2018 அன்று ஊருக்கு வந்த சென்ராஜப்பா, அந்த பகுதியில் உள்ள ஓடக்கரை அருகே, பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது. மேலும் அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

10 ஆண்டு சிறை

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சென்ராஜப்பாவின் நண்பர்கள் சீனப்பா, ராஜப்பா ஆகியோர் மதுபோதையில் தலைமீது கல்லை போட்டு கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு, ஓசூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதி ரோசலின் துரை முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜப்பாவிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார். சீனப்பா வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.


Next Story