சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி திட்டம் அமல்படுத்த வேண்டும்


சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி திட்டம் அமல்படுத்த வேண்டும்
x

சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி திட்டம் அமல்படுத்த வேண்டும்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தில் பணியாற்றும்

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டம் அமல்படுத்த வேண்டும் என்று ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்க பேரவை வலியுறுத்தி உள்ளது.

பேரவை கூட்டம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் 36-வது ஆண்டு பேரவை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். பேரவை கொடியினை வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் அன்பழகன் ஏற்றிவைத்தார்.

மாநில இணை பொதுச்செயலாளர் குணசேகரன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.மாநில நிர்வாக குழு உறுப்பினர் தியாகராஜன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார், மாநில பொருளாளர் கோவிந்தராஜன் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். கூட்டத்தில், இறந்த 23 தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.

வைப்பு நிதி திட்டம்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பேரவையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நியாயமான கூலிக்காக பலகட்ட போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் தற்போதைய தமிழக அரசு மூட்டை ஒன்றுக்கு 3ரூபாய் 25 காசு என்று வழங்கப்பட்ட கூலியை ரூ.10 ஆக உயர்த்தி வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பது. நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றுகின்ற சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அறிவித்து செயல்படுத்த வேண்டும்.

கலெக்டருக்கு அதிகாரம்

ஈரப்பத தளர்வு குறித்து முடிவெடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் விவசாயிகள் இயக்க தலைவர்கள் முத்து உத்ராபதி, பாலசுந்தரம், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட தலைவர் வெ.சேவையா, அரசு போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் துரை. மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயலாளர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.


Next Story