அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக எடுக்கும் தண்ணீர்


அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக எடுக்கும் தண்ணீர்
x

அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக எடுக்கும் தண்ணீர் குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

அமராவதி ஆறு

கரூர் நகர மக்களின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய தேவைகளைஅதிகளவில் பூர்த்தி செய்யும் வகையில் காவிரி மற்றும் அமராவதி ஆறு திகழ்ந்து வருகிறது. அமராவதி ஆறானது கரூர், திருப்பூர் மாவட்டங்களை வளப்படுத்துவடன் காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாக உள்ளது.

அமராவதி ஆறு திண்டுக்கல் மாவட்டம், பழனி மலை தொடருக்கும், ஆனைமலை தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகி, அமராவதி அணையில் தேக்கப்படுகிறது.

வறண்டு கிடக்கிறது

அங்கிருந்து அமராவதி ஆறு வடகிழக்காக குமரலிங்கம், தாராபுரம் பகுதி வழியாக பாய்ந்து கரூர் நகரின் வழியாக சென்று திருமாகூடலூர் அருகில் காவிரியில் கலக்கிறது. இதனால் கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றின் தண்ணீரை கொண்டு 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் விலை நிலங்கள் பாசான வசதி பெறுகிறது.

இவ்வாறு நகர மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாய தேவைக்கும் பூர்த்தி செய்து வரும் அமராவதி ஆறானது ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடுவதில்லை. மழை மற்றும் பருவ காலங்களில் ஆற்றில் நீர் வரும் அப்போது, அவற்றை தேக்கி வைத்து குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக பயன்பட்டு வருகிறது. தற்போது அமராவதி ஆறு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

கோரிக்கை

இந்தநிலையில் அமராவதி ஆற்றங் கரையோரம் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து அவற்றின் மூலம் சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சப்பட்டு, அவற்றை லாரிகள் மூலம் எடுத்துச் சென்று கட்டுமான நிறுவனங்கள், கல்குவாரிகள் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அமராவதி ஆற்றில் தண்ணீர் வறண்டு கிடைக்கிறது. வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகமாக இருப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே சட்ட விரோதமாக தண்ணீர் எடுத்து செல்லப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story