ஓங்கு புகழோடு வாழ்க...! முதல்-அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய இளையராஜா...!


ஓங்கு புகழோடு வாழ்க...! முதல்-அமைச்சருக்கு  பிறந்தநாள் வாழ்த்து கூறிய இளையராஜா...!
x

ஓங்கு புகழோடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், திரையுலக பிரபலகங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இசையமைப்பாளர் இளையராஜா தற்போது தெலுங்கான மாநிலம் ஐதராபாத்தில் ஒரு இசைக் கச்சேரியில் பங்கேற்றுள்ளார். அங்கிருந்து வீடியோ மூலம் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்திருப்பதாவது:-

தன்னுடைய 70வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, நிறைந்த செல்வத்தோடு, ஓங்கு புகழோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் " என் இசையமைச்ப்பாளர் இளையராஜா பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Next Story