திருக்கோவிலூர் அருகே இளையபெருமாள் கோவில் பெரும் பூஜை விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு


திருக்கோவிலூர் அருகே இளையபெருமாள் கோவில் பெரும் பூஜை விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 10:13 AM GMT)

திருக்கோவிலூர் அருகே இளையபெருமாள் கோவில் பெரும் பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள காட்டுப்பையூர் கிராமத்தில் ஸ்ரீ இளையபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரும் பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி பெரும்பூஜை விழா கடந்த 6ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவில் கடந்த 13-ந்தேதி மாலை 6 மணிக்கு பால் பூஜை விழா நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் ஸ்ரீ இளையபெருமாள் சாமிக்கு பெரும்பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு இணங்க சுமார் ஆயிரம் ஆடுகள், பன்றிகளை பலி கொடுத்தனர். தொடர்ந்து, அங்கு பொங்கலிட்டு சமைத்து சாப்பிட்டனர். இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் திருக்கோவிலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள், கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னின்று செய்திருந்தனர்.


Next Story