சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் 'நியாயமான முடிவு கிடைக்காவிட்டால் சட்டசபையை புறக்கணிப்போம்' - வைகைச்செல்வன்


சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் நியாயமான முடிவு கிடைக்காவிட்டால் சட்டசபையை புறக்கணிப்போம் - வைகைச்செல்வன்
x

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள 'ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்து கொண்டு பேசுகிறார்.

அதில் அவர் பேசும்போது, பல்வேறு மாநில கட்சிகளில் வாரிசு முறை இருக்கிறது. அ.தி.மு.க.வில் அப்படி இல்லை. அ.தி.மு.க. தலைவரை காலம் தான் தீர்மானிக்கும் என்பது கடந்த கால வரலாறு. அதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி என்ற எளிய தலைவரை காலம் காண்பித்து இருக்கிறது. அவர் வெற்றி பெறுவது உறுதி. கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் இருக்கிறார்கள். எனவே அவர் விரைவில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வருவார். இதை காலம் செய்து முடிக்கும் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்கவேண்டும் என்றும், சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்தை கண்ணியமாக நடத்தவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதேவேளையில், சபாநாயகர் பெரும்பான்மை முடிவின்படி நியாயமாக நடக்கவேண்டும் என்று அ.தி.மு.க. எதிர்பார்க்கிறது என்றும் கூறினார். மேலும், இதில், தி.மு.க. அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது. நியாயமான முடிவு கிடைக்காவிட்டால் சட்டமன்றத்தை புறக்கணிக்கவும் தயங்கமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள்?, ஆர்.எஸ்.எஸ். பேரணி, இந்தி மொழி பிரச்சினை, அ.தி.மு.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது உள்ளிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளரின் சமகால அரசியல் கேள்விகளுக்கு பொறுமையாகவும், விளக்கமாகவும் வைகைச்செல்வன் பதில் அளித்துள்ளார்.


Next Story