இலம்பி தோல் நோயிலிருந்து மாடுகளை பாதுகாப்பது எப்படி?


இலம்பி தோல் நோயிலிருந்து மாடுகளை பாதுகாப்பது எப்படி?
x

இலம்பி தோல் நோயிலிருந்து மாடுகளை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அறிவுரை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கரூர்

இலம்பி தோல் நோய்

வடமாநிலங்களில் மாடுகளில் பரவி வந்த இலம்பி தோல் நோய் தற்போது தமிழகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. இந்நோய் மாட்டினங்களை தாக்கும் அம்மை போன்ற ஒரு நச்சுயிரி நோய் ஆகும். இதனால் தலை, கழுத்து, உடம்பு, கால்கள், மடி போன்ற அனைத்து பகுதிகளிலும் தோலில் 2-5 செ.மீ அளவுள்ள அம்மை போன்ற கட்டிகள் ஏற்படும்.

இதை கவனிக்காமல் விட்டால் கட்டிகள் சீழ் பிடித்து புண்ணாகி புழுக்கள் வரவும் வாய்ப்பு உள்ளது. இந்நோயானது கொசு, உண்ணி, ஈக்கள் மற்றும் கடிக்கும் பூச்சிகள் மூலம் பரவக்கூடியது. மேலும், பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து மற்ற மாடுகளுக்கு எச்சில், சளி, பால், விந்தணு வழியாக விரைவாக பரவக்கூடியது.

மாட்டை தனிமைப்படுத்த வேண்டும்

எனவே, இந்நோய் வராமல் தடுக்க மாட்டுக்கொட்டகையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். மேலும், மாடுகளை கொசு போன்ற பூச்சிகள் கடிக்காத வகையில் பாதுகாக்க வேண்டும். மாடுகளுக்கு நோய் வந்தால், உடனே பாதித்த மாட்டை தனிமைப்படுத்த வேண்டும். உடனடியாக அருகே உள்ள கால்நடை டாக்டருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

சந்தைகளில் மாடுகள் வாங்குவதை இயன்ற வரை சில வாரங்களுக்கு தவிர்க்க வேண்டும். எனவே, கால்நடை வளர்ப்போர் விழிப்புணர்வுடன் இந்நோய் வராமல் தங்கள் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story