பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது எப்படி?


பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது எப்படி?
x

பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது எப்படி என்பது குறித்து டாக்டர் பிரவீன்குமார், தீயணைப்பு அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் விளக்கம் கொடுத்துள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி,

பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது எப்படி என்பது குறித்து டாக்டர் பிரவீன்குமார், தீயணைப்பு அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் விளக்கம் கொடுத்துள்ளனர்.

டாக்டர்

இதுகுறித்து அனில்குமார் ஆஸ்பத்திரியின் டாக்டர் பிரவீன்குமார் கூறியதாவது, பட்டாசு வெடிக்கும் போது கண்களில் காயம் ஏற்பட்டால் கண்களை திறந்து சுத்தமான குளிர்ந்த நீரை ஊற்றி கழுவ வேண்டும். கண்களை கசக்க வேண்டாம். கண்களை பரிசோதிக்காமல் சுய வைத்தியம் செய்ய வேண்டாம். கண்களில் களிம்பு மருந்துகள் போட்டால் கண்களை பரிசோதனை செய்ய சிரமமாக இருக்கும்.

கண்களில் காயம் ஏற்பட்டால் அதனை லேசாக நினைத்து மருத்துவம் பார்க்காமல் இருந்து விட வேண்டாம். திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதேநேரத்தில் நீண்ட ஊதுவத்தியை பட்டாசு வெடிக்க பயன்படுத்த வேண்டும். பூசட்டி வெடிகளை வெடிக்கும் போது மிகவும் குனிந்து வெடிக்க வேண்டாம். பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

தீயணைப்பு அதிகாரி

சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது, பட்டாசு வெடிக்கும் போது பொதுமக்கள் மிகவும் கவனமாக வெடிக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் உடனே அணைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய 3 நாட்களிலும் அனைத்து தீயணைப்பு பணியாளர்களையும் பணியில் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 31 பேர் 24 மணி நேரமும் பணியில் இருப்போம்.

பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என்று 16 பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story