சரக்கு ஆட்டோ மோதி குதிரை படுகாயம்
கூத்தாநல்லூரில் சரக்கு ஆட்டோ மோதி குதிரை படுகாயம் அடைந்தது.
திருவாரூர்
கூத்தாநல்லூர்:-
கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி சாலையோரத்தில் நேற்று குதிரை ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த குதிரை மீது சரக்கு ஆட்டோ ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் வயிற்றிலும், காலிலும் பலத்த காயம் அடைந்த குதிரை அங்கேயே சுருண்டு விழுந்தது. வலி தாங்க முடியாமல் துடிதுடித்துக் கொண்டிருந்த அந்த குதிரைக்கு அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன், கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். குதிரை காயம் அடைந்து சாலையில் கிடந்ததால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story