தில்லை காளியம்மன் கோவில் திருவிழா


தில்லை காளியம்மன் கோவில் திருவிழா
x

குத்தாலம் அருகே தில்லை காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம் அருகே உள்ள ஆனைமேலகரம் மஞ்சளாற்று தெருவில் தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் 23-ம் ஆண்டு கரகம், காளியாட்டம், காவடி திருவிழா கடந்த 10-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து கஞ்சி வார்த்தல், விநாயகர், சுப்பிரமணியருக்கு அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை, சந்தன காப்பு அபிஷேகம், அன்னதானம், பாலாபிஷேகம், திருவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடந்தன. திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையில் இருந்து கரகம், பால்குடம், காவடிகள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர், அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மஞ்சளாற்றுத் தெரு பொதுமக்கள் செய்திருந்தனர்.






Next Story