உயர்கல்வி கள வழிகாட்டுதல் நிகழ்ச்சி


உயர்கல்வி கள வழிகாட்டுதல் நிகழ்ச்சி
x

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரியில் உயர்கல்வி கள வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மயிலாடுதுறை


தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பிளஸ்-2 மாணவர்கள் அனைவரையும் உயர்கல்வி படிப்பை தொடர செய்ய பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், அரசுப்பள்ளிகளில் பிளஸ்-12 படிக்கும் மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்த இந்த கல்விச் சுற்றுலாவில், கொண்டல், காரைமேடு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகள், கொற்கை, திருமங்கலம், வேழமுறித்தான்பேட்டை, கோனயாம்பட்டினம், மணல்மேடு, தேரழந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி, சீர்காழி நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி கள வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அறவாழி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். இதில், மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர், பள்ளி மாணவர்களுக்கு கல்லூரியின் வகுப்பறைகள், ஆய்வக வசதிகள் அனைத்தையும் சுற்றிக்காட்டி விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


Next Story