மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி


மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி
x

வேளாண் உழவர் நலத்துறை சார்பில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி நடைபெற்றது.

கரூர்

வேளாண் உழவர் நலத்துறை மூலமாக உயர்தர உள்ளூர் ரகங்களை கண்டறிந்து அவற்றை பிரபலப்படுத்துவதற்கும், வேளாண் ஆராய்ச்சியாளர்கள் அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு சிறந்த ரகங்களை உருவாக்கும் வகையில் தேவையான அடிப்படை மரபணுகளை பாரம்பரிய ரகங்களில் கண்டறிவது தொடர்பான மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி கரூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியில் பாரம்பரிய கருங்குருவை, கருப்பு கவுனி, காட்டு யானம், கிச்சிலி சம்பா, குளியடிச்சான், குள்ளக்கார், மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி உள்ளிட்ட நெல் வகைகள், பஞ்சகாவியம், பட்டு வளர்ச்சி, நாட்டு காய்கறி விதைகள், செக்கு எண்ணெய், உள்ளூரில் கிடைக்கும் இடுபொருட்களை கொண்டு தயாரிக்கும் வேளாண் கருவிகள், சேங்கல் துவரை, சிறுதானியங்கள், செறிவூட்டப்பட்ட தென்னை நார், தொழு உரம், முருங்கை தேன் உள்ளிட்டவைகளை வகைப்படுத்தி 25-க்கும் மேற்பட்ட அரங்குகள் கண்காட்சிக்காக அமைக்கப்பட்டு இருந்தது. இந்தநிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன், அரசு வேளாண்மை கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன், விவசாயிகள், அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story