கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்


கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
x

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக 22 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதில், கனமழைக்கு முன்னதாகவே, தேவைப்படக்கூடிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்தையும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் . மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story