தாளவாடி அருகே பலத்த மழை - பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம்...!


தாளவாடி அருகே பலத்த மழை - பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம்...!
x

தாளவாடி அருகே பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஈரோடு


ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் கடும் வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்து நெய்தாளபுரம், தலலை, கோடிபுரம், திகினாரை, ஏரகனள்ளி, கிருஷ்ணபுரம் போன்ற கிராமங்களில் 1 மணிநேரம் பலத்த மழை பெய்தது.

சுமார் ஒரு மணிநேரம் நீடித்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. வனப்பகுதியிலும் நல்ல மழை பெய்தது. நெய்தாளபுரம் பகுதியில் பெய்த மழையால் அங்குள்ள ஓடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.


Next Story