குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பலத்த மழை பேச்சிப்பாறையில் 67 மி.மீ. பதிவானது


குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பலத்த மழை பேச்சிப்பாறையில் 67 மி.மீ. பதிவானது
x

குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பேச்சிப்பாறையில் 67 மி.மீ. பதிவானது

கன்னியாகுமரி

குலசேகரம்,:

குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பேச்சிப்பாறையில் 67 மி.மீ. மழை பதிவானது.

பலத்த மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணை பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மதியத்திற்கு மேல் பருவ மழையை போல் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் விட்டு விட்டு பெய்தது.

பின்னர் சாரல் மழையாகவும் நீடித்தது. இந்த மழையால் அணைகளுக்கு நீரின் வரத்து அதிகரித்தது. மேலும் குலசேகரம் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதையும் காணமுடிந்தது. மழையின் காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

67.6 மி.மீ. பதிவு

நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை பகுதியில் 67.6 மி.மீ. பதிவாகி உள்ளது. இதுபோக சிற்றார் அணை பகுதியிலும் 3 மி.மீ. மழை பெய்தது.

அக்னி நட்சத்திரம் முடிந்த மறுநாள் முதல் தொடர்ச்சியாக மலையோர பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்தது. மேலும் பூமி குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.


Next Story