கோவில், மசூதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


கோவில், மசூதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x

கோவில், மசூதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தஞ்சாவூர்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோவில்கள், மசூதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடை

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சில இடங்களில் 2-வது முறையாகவும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

போலீஸ் பாதுகாப்பு

இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக முக்கிய கோவில்கள், மசூதிகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும், ஆற்றங்கரையில் உள்ள மசூதி உள்ளிட்ட பல்வேறு மசூதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் தஞ்சை பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம் ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தீவிர கண்காணிப்பு

மேலும் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்பெக்டர்கள் மற்றும் போலீசார் இந்த பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.


Next Story