குமரி மாவட்டத்தில் மதுவை பதுக்கி விற்ற 32 பேர் கைது

குமரி மாவட்டத்தில் மதுவை பதுக்கி விற்ற 32 பேர் கைது
x

குமரி மாவட்டத்தில் மதுவை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டதாக கடந்த 3 நாட்களில் 32 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அனுமதியின்றி செயல்பட்ட 90 பார்கள் மூடப்பட்டன.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் மதுவை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டதாக கடந்த 3 நாட்களில் 32 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அனுமதியின்றி செயல்பட்ட 90 பார்கள் மூடப்பட்டன.

மது விற்ற 32 பேர் கைது

தமிழகத்தில் கள்ளச்சாரம் மற்றும் திருட்டு மது விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குளச்சல், கன்னியாகுமரி மற்றும் தக்கலை ஆகிய 4 போலீஸ் சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் போலீசார் இரவு, பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து கடந்த 22-ந் தேதியன்று மாவட்டம் முழுவதும் மதுவை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டதாக 13 பேரும், நேற்று முன்தினம் 8 பேரும் கைது செய்யப்பட்டனர். நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய தீவிர கண்காணிப்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் கடந்த 3 நாட்களில் 32 பேர் கைதானார்கள்.

90 மதுபார்கள் மூடல்

மாவட்டத்தில் 115 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் சுமார் 20 பார்கள் மட்டுமே அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது போலீசாரின் அதிரடி சோதனையில் 90 பார்கள் அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த பார்கள் மூடப்பட்டன.

Next Story