வேப்பனப்பள்ளி பகுதியில்நிலக்கடலை அறுவடை பணி தீவிரம்


வேப்பனப்பள்ளி பகுதியில்நிலக்கடலை அறுவடை பணி தீவிரம்
x
தினத்தந்தி 1 Oct 2023 7:30 PM GMT (Updated: 1 Oct 2023 7:30 PM GMT)

வேப்பனப்பள்ளி பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி தீவிரம் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி பகுதியில் நிலக்கடலை அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நிலக்கடலை சாகுபடி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் நடப்பாண்டில் விவசாயிகள் அதிகளவில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். வேப்பனப்பள்ளி, சிகரமாகனப்பள்ளி, கொங்கனப்பள்ளி, நாச்சிகுப்பம் பண்ணப்பள்ளி, நேரலகிரி, தீர்க்கம், பதிமடுகு, சிங்கிரிப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நிலக்கடலை செடிகள் தண்ணீர் இன்றி காய்ந்தன. தற்போது சமீபகாலமாக மழை பெய்து வருவதால் நிலக்கடலை செடிகளுக்கு தண்ணீர் கிடைத்து வளர்ந்தன.

விவசாயிகள் மகிழ்ச்சி

தற்போது வயல்களில் நிலக்கடலை செடிகள் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகின. இதனால் நிலக்கடலை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிலக்கடலைகளை மூட்டைகளில் நிரப்பி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திர மற்றும் கர்நாடக மாநில பகுதிகளுக்கும் விவசாயிகள் அனுப்பி வருகின்றனர்.

மேலும் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு விளைச்சல் குறைந்துள்ளதால் நிலக்கடலை விலை அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஒரு கிலோ நிலக்கடலை ரூ.30 முதல் ரூ.50 ரூபாய் வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு ரூ.40 முதல் ரூ.70 வரை விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story