கிராம பகுதிகளில் ஆலங்கட்டி மழை
கிராம பகுதிகளில் ஆலங்கட்டி மழை நடந்தது.
திருச்சி
கொள்ளிடம் டோல்கேட்:
திருச்சியை அடுத்த வாத்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. அப்போது கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த வைக்கோல் மூட்டம் மற்றும் வீட்டின் கூரை உள்ளிட்டவை சூறாவளி காற்றில் அங்கும், இங்கும் பறந்தன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அப்போது திடீரென ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. தரையில் விழுந்த ஆலங்கட்டிகளை கையில் எடுத்து பார்த்து உற்சாகமடைந்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த ஆலங்கட்டி மழையால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story