புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை


புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
x

காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை வரதராஜபுரம் நரேந்திரதேவர் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மகன் செல்வகுமார் (வயது 30). இவர் சூலூரில் உள்ள ஒரு கார் ஷோரூமில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த நந்தினி (24) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திடீரென்று செல்வகுமார் குடிபழக்கத்துக்கு அடிமையானார். இதனால் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு செல்வகுமாரிடம் நந்தினி கூறி வந்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி செல்வகுமார் வீட்டில் இருந்தபோது தனது கையில் விஷபாட்டிலுடன் மயங்கி கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தினி, விஷம் குடித்தீர்களா என்று கேட்டார். அதற்கு அவர் இல்லை என்று கூறிவிட்டார். இந்த நிலையில் மறுநாள் செல்வகுமார் வாந்தி எடுத்தார். அப்போது தான் விஷம் குடித்துவிட்டதாக அவர் கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நந்தினி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செல்வகுமாரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி செல்வகுமார் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story