5-வது முறையாக நிரம்பி வழியும் பெரிய ஏரி


5-வது முறையாக நிரம்பி வழியும் பெரிய ஏரி
x

5-வது முறையாக பெரிய ஏரி நிரம்பி வழிந்தது.

திருச்சி

துறையூர்:

துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான பச்சைமலை, செங்காட்டுப்பட்டி, கீரம்பூர், செல்லிபாளையம், வைரிசெட்டிபாளையம், ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், அந்தந்த பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதில் செல்லிபாளையம் ஏரி, கீரம்பூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் கடந்த 2 நாட்களாக நீர் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துறையூர் பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, கடைக்கால் வழியாக நீர் செல்கிறது. தற்போது மழை பெய்ததால் ஏரியில் இருந்து மீண்டும் அதிக அளவில் நீர் வெளியேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் ஏரியின் கடைக்கால் பகுதியில் நின்று செல்பி எடுத்து வருகின்றனர்.

இந்த ஆண்டு 5-வது முறையாக நிரம்பி வழியும் பெரிய ஏரி நீர் பாலக்கரை சின்ன பாலம் வழியாக சின்ன ஏரியை சென்று அடைகிறது. இதனால் துறையூர் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்றும், ஒரு வருடத்துக்கு நிலத்தடி நீர் இருக்கும் என்றும் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். துறையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்வதற்காக விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story