306 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்


306 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 2 Oct 2023 7:45 PM GMT (Updated: 2 Oct 2023 7:46 PM GMT)

காந்திஜெயந்தியையொட்டி மாவட்டம் முழுவதும் 306 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்

கிராமசபை கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 306 ஊராட்சிகள் இருக்கின்றன. இந்த ஊராட்சிகள் அனைத்திலும் நேற்று காந்திஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி ஆத்தூர் ஒன்றியம் தொப்பம்பட்டி ஊராட்சி சாதிகவுண்டன்பட்டியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். துணை தலைவர் மகுடீஸ்வரன் முன்னிலை வகித்தார். செயலாளர் ராமசாமி அறிக்கை வாசித்தார்.

கலெக்டர் பங்கேற்பு

கூட்டத்தில் கலெக்டர் பூங்கொடி கலந்து கொண்டு பேசுகையில், ஊராட்சிகளின் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இருப்பதற்காக வரவு-செலவுக்கு ஒப்புதல் அளித்தல், வளர்ச்சிக்கு திட்டமிடுதல் உள்பட முக்கிய அதிகாரங்கள் கிராமசபைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் செயல்படும் நூலகங்கள், இளைஞர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக பயனுள்ளதாக இருக்கிறது. இந்த ஊராட்சியில் 2 ஆண்டுகளில் ரூ.1 கோடியே 98 லட்சத்தில் 43 பணிகள் நடந்துள்ளன. இந்த ஆண்டு 21 பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கிராமங்கள் வளர்ச்சி பெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், என்றார்.

இதையடுத்து கலெக்டர் தலைமையில் பெண் குழந்தை பாதுகாப்பு தொடர்பாக அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். இதில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் கருப்புசாமி, மாவட்ட சமூக நலஅலுவலர் புஷ்பகலா, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், துணை தலைவர் ஹேமலதா மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பூலத்தூர் ஊராட்சி

இதேபோல் கொடைக்கானல் கீழ்மலை பூலத்தூர் ஊராட்சியில் தலைவர் ஆனந்தன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினராக இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். இதில் பூலத்தூரில் இருந்து தும்பலப்பட்டி வரை சாலை அமைக்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ வார்டு அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சியில் தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் தலைமையில் பள்ளங்கியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. செயலாளர் துரைப்பாண்டி வரவேற்றார். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டிகுமார் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொடைக்கானல் நகருக்கு மாற்றுச்சாலையாக வில்பட்டி- கோவில்பட்டி -பேத்துபாறை இணைப்பு சாலையை உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.

புளியம்பட்டி ஊராட்சி

பழனி அருகே உள்ள புளியம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கா.பொன்ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சுலோச்சனா சோமு, புளியம்பட்டி ஊராட்சி தலைவர் சந்திரா சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சியில் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் பிருந்தா, செயலர் சிவசங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அ.கலையம்புத்தூர் ஊராட்சியில் தலைவர் வந்தனா முரளி தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. பாப்பம்பட்டி, கரடிக்கூட்டம் என பழனி வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

வேலம்பட்டி ஊராட்சி

நத்தம் அருகே உள்ள வேலம்பட்டி ஊராட்சியில் தலைவர் கண்ணன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

புன்னப்பட்டியில் ஊராட்சி தலைவர் ஜெயப்பிரகாஷ், பண்ணுவார்பட்டியில் ஊராட்சி தலைவர் ஆண்டிச்சாமி, லிங்கவாடியில் ஊராட்சி தலைவர் அழகுநேரு, ரெட்டியபட்டி ஊராட்சி வத்திபட்டியில் தலைவர் சாத்திபவுர், செல்லப்பநாயக்கன்பட்டியில் தலைவர் சவுந்திரராஜன், பரளிபுதூரில் தலைவர் வெள்ளைத்தாய் தங்கராஜ், சாத்தம்பாடியில் தலைவர் பரமேஸ்வரி முருகன் ஆகியோர் தலைமையில் அந்தந்த ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் தலைவர் லதா தர்மராஜ் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. துணை தலைவர் அர்ச்சுனன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் மாரிமுத்து செய்திருந்தார்.

திண்டுக்கல் பள்ளப்பட்டி ஊராட்சியில் வடக்கு பாறைப்பட்டி விநாயகர் கோவில் அருகே தலைவர் பரமன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் தனலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். சீலப்பாடி ஊராட்சியில் கிராமசபை கூட்டத்துக்கு தலைவர் மீனாட்சி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜெயக்குமார், ஊராட்சி செயலாளர் சுதாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோட்டூர் ஊராட்சி

நிலக்கோட்டை அருகே உள்ள கோட்டூர் ஊராட்சியில் தலைவர் சுகந்தா கரிகால பாண்டியன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துணைத் தலைவர் கீதா, ஊராட்சி செயலாளர் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜம்புதுரைகோட்டை ஊராட்சியில் உள்ள காமலாபுரத்தில் தலைவர் பவுன் தாய் காட்டு ராஜா தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சிவராமன், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிலுக்குவார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் செல்வி ஜெயசீலன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் தலைவர் முனிராஜா தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துணைத் தலைவர் அம்சவல்லி, செயலாளர் சின்னச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். சித்தர்கள் நத்தம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி முத்தையா தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர் விஜயகர்ண பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செந்துறை ஊராட்சி

நத்தம் தாலுகா செந்துறை ஊராட்சிக்குட்பட்ட திருநூத்துப்பட்டியில் தலைவர் சவரிமுத்து தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் துணைத்தலைவர் அழகர்சாமி, ஊராட்சி செயலாளர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். குடகிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மந்தகுளத்துப்பட்டியில் தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் சூர்யா சந்திரன், ஊராட்சி செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

பிள்ளையார்நத்தம் ஊராட்சி பாறைப்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு தலைவர் தேன்மொழி முருகன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் பாக்கியலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சிறுகுடி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு தலைவர் கோகிலவாணி வீரராகவன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செல்வம், செயலாளர் வீரபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

செட்டிபட்டி ஊராட்சி

ஊராளிபட்டி ஊராட்சி காத்தாம்பட்டியில் தலைவர் தேன்சேகர் தேனம்மாள் தலைமையில் நடந்த கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சின்னச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமுத்திராபட்டி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு தலைவர் சேது தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சின்னச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

செட்டிபட்டி ஊராட்சியில் தலைவர் ராஜா, முன்னிலைக்கோட்டை ஊராட்சியில் தலைவர் ஆரோக்கியம்மாள், பஞ்சம்பட்டி ஊராட்சியில் தலைவர் பாப்பாத்தியம்மாள், பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் தலைவர் உலகநாதன், பித்தளைப்பட்டி ஊராட்சியில் தலைவர் மயில்சாமி.

அம்பாத்துரை ஊராட்சியில் தலைவர் சேகர், ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் தலைவர் ஆறுமுகம், காந்திகிராம ஊராட்சியில் தலைவர் தங்க முனியம்மாள், கலிக்கம்பட்டி ஊராட்சியில் தலைவர் கோமதி, வீரக்கல் ஊராட்சியில் ராஜேஸ்வரி, பச்சமலையான்கோட்டை ஊராட்சியில் தலைவர் காளிதாஸ், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் அ.வெள்ளோடு ஊராட்சியில் தலைவர் இளங்கோ தலைமையில் அந்தந்த ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.

சிறுமலை ஊராட்சியில் தலைவர் சங்கீதா வெள்ளிமலை தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் எம்.பி. வேலுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், ஊராட்சி செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் தலைவர் ரேவதி நாகராஜ் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 4 மதுக்கடைகளை அகற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் துணைத் தலைவர் பானுப்பிரியா, ஊராட்சி செயலர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

அடியனூத்து ஊராட்சியில் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் துணைத் தலைவர் ஜெயராமன், ஊராட்சி செயலர் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தோட்டனூத்து ஊராட்சியில் ரெட்டியபட்டியில் தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் துணைத் தலைவர் சரவணன், ஊராட்சி செயலர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story