அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்


அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்
x

அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

தஞ்சாவூர்

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் முருகேசன், மாநில துணைத் தலைவர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உண்ணாவிரதத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை மத்தியஅரசு அமல்படுத்தும் அதே தேதியில் மாநில அரசும் அமல்படுத்த வேண்டும். வருவாய் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக ரூ.15,700 மாத ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும். தமிழகம் முழுவதும் பணியிடங்கள் நிரப்பபட்ட நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வருவாய் கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் ஏராளமான தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story