அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x

பணி நேரத்தை நீட்டிக்கும் அரசாணையை திரும்ப பெறக்கோரி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்


தஞ்சை மாவட்ட அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை மருத்துவக்கல்லூரி வாயிலில் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வினோத், ராஜேந்திரன், தென்றல், வெண்ணிலா, முத்துவிநாயகம், சாந்தபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் செயலாளர் மணவழகன் வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களின் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என இருந்தது. இதனை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என மாற்றி அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வாரத்தில் 40 மணி நேரம் வேலை என்பது தற்போது டாக்டர்களுக்கு 48 மணி நேரம் என உயர்த்தப்பட்டுள்ளது.அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களின் பணி நேரத்தை எந்தவித கலந்தாலோசனையும் இன்றி தன்னிச்சையாக இயக்குனர் கருத்துப்படி அரசாணை வெளியிட்டு இருப்பது வருந்தத்தக்கது. எனவே இந்த அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.


Next Story