சிங்கம்புணரி-திருப்புவனம் இடையே அரசு பஸ்களை இயக்க வேண்டும்


சிங்கம்புணரி-திருப்புவனம் இடையே அரசு பஸ்களை இயக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 July 2023 6:45 PM GMT (Updated: 10 July 2023 12:18 PM GMT)

சிங்கம்புணரி-திருப்புவனம் இடையே அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சிவகங்கை

சிங்கம்புணரி-திருப்புவனம் இடையே அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.சிங்கம்புணரி

சிங்கம்புணரி-திருப்புவனம் இடையே அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மடப்புரம் கோவில்

சிவகங்கை மாவட்டம் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது சிங்கம்புணரி- திருப்புவனம் பகுதி. சிங்கம்புணரி புதுக்கோட்டை-திருச்சி போன்ற மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. திருப்புவனம் மதுரை எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. சிங்கம்புணரி- திருப்புவனம் ஆகிய பகுதி தாலுகா, ஊராட்சி ஒன்றியம், நகர், பேரூராட்சி, ேபாலீஸ் நிலையம், நீதிமன்றம் செயல்படுகின்றன. திருப்புவனம் பகுதியில் பிரசித்தி பெற்ற மடப்புரம் காளியம்மன் கோவில், திருப்புவனத்தில் சிவன் கோவில் உள்ளன. மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக நடந்து சென்று வருகிறார்கள். வாரத்திற்கு 2 முறை இந்த பகுதியில் இருந்து பக்தர்கள் சென்று வருகிறார்கள்.

தனியார் பஸ்கள்

அதேபோல் திருப்புவனம் பகுதிக்கு திதி கொடுப்பதற்காகவும், சிவன் கோவிலுக்கும் பக்தர்கள் செல்வது வழக்கம். கடந்த 1980-ம் ஆண்டுகளில் 2 தனியார் பஸ்கள் சிங்கம்புணரியில் இருந்து மேலூர், மடப்புரம் வழியாக திருப்புவனம் வரை இயக்கப்பட்டன. 1990-ம் ஆண்டுகளில் இந்த பஸ்கள் நிறுத்தப்பட்டன. தற்ேபாது 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த வழித்தடத்தில் புதிய பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

இது குறித்து சமூக ஆர்வலர் சக்திவேல் பேரூராட்சி மன்றத்தில் மனு கொடுத்து உள்ளார்.

அதில் மாவட்டத்தின் எல்லை கோடியில் உள்ள சிங்கம்புணரி மற்றும் திருப்புவனம் பகுதியில் நீதிமன்றங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. சிங்கம்புணரியில் இருந்து மேலூர், திருவாதவூர், பூவந்தி, மடப்புரம் ஆகிய வழித்தடங்கள் வழியாக திருப்புவனத்திற்கு அரசு பஸ்களை இயக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ்கள் இல்லாததால் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

பஸ் இயக்க கோரிக்கை

இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, சிங்கம்புணரியில் இருந்து திருப்புவனத்துக்கு நேரடியாக பஸ் வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும். 30 ஆண்டுக்கு முன்பு பஸ் வசதி இருந்தது. தற்ேபாது இல்லை.

இதனால் மடப்புரம், திருப்புவனம் கோவில்களுக்கு செல்ல 2 அல்லது 3 பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் நேரம் வீணாகுவதோடு பக்தர்களும் அவதிப்படுகிறார்கள். எனவே சிங்கம்புணரியில் இருந்து திருப்புவனத்துக்கு அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்றனர்.


Next Story