தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு


தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு
x

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ. 43,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிராமிற்கு 60 காசுகள் குறைந்து ரூ.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story