தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு


தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு
x

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னை,

கடந்த சில தினங்களாக சென்னையில் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து சவரன் ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.60.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 60,900-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story