பவித்திரமாணிக்கம் பள்ளி மாணவனுக்கு தங்கப்பதக்கம்
பவித்திரமாணிக்கம் பள்ளி மாணவனுக்கு தங்கப்பதக்கம்
திருவாரூர்
கொரடாச்சேரி
திருவண்ணாமலையில் பள்ளி விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவிலான கராத்தே உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் கொரடாச்சேரி ஒன்றியத்துக்குட்பட்ட பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவன் மிதின்நிதின் கலந்துகொண்டு கராத்தே போட்டியில் தங்கப்பதக்கமும், யோகா போட்டியில் வெண்கலப்பதக்கமும் பெற்றான். யோகா போட்டியில் 6-ம் வகுப்பு மாணவன் ஸ்ரீநாத் வெள்ளிப்பதக்கம் வென்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story