தர்மபுரியில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.41 ஆயிரத்தை கடந்தது


தர்மபுரியில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.41 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 31 Dec 2022 6:45 PM GMT (Updated: 31 Dec 2022 6:45 PM GMT)
தர்மபுரி

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்திலும் கடந்த மாதம் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்தை தாண்டியது. மேலும் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை நேற்று ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5,115- க்கு விற்பனையான தங்கம் நேற்று கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5,130 ஆக இருந்தது. இதனால் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.41 ஆயிரத்து 40 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.41 ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story