விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்


விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
x

திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் தயார் செய்து முடிக்கப்பட்ட சிலைகள் வர்ணம் பூசப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் தயார் செய்து முடிக்கப்பட்ட சிலைகள் வர்ணம் பூசப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் விநாயகர் சதுா்த்தி விழா வருகிற 18-ந் தேதி(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடப்பது வழக்கம். விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உள்ள மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்தி இந்த சிலைகளை செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

சிலைகள் ஊர்வலம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அண்ணா நகர் பகுதியில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் செய்யப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் முக்கிய பகுதிகளில்விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு அனுமதிக்கப்படும் ஒரு நாளில் ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பது வழக்கம்.இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வருகிற 23-ந் தேதி(சனிக்கிழமை) புகழ்பெற்ற முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. இதைப்போல திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், வேதாரண்யம் போன்ற பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு ஊர்வலம் நடக்கிறது.

சிலைகள் தயாரிப்பு

திருத்துறைப்பூண்டி அண்ணா நகர் ெரயில்வே கேட் அருகில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை தயாரித்து அனைத்து ஊர்களுக்கும் விற்பனை செய்து வழங்குகின்றனர். மேலும் அவர்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை குறைவாக உள்ளதாகவும் நிறைய முதலீடு செய்து சிலைகள் செய்து உள்ளதாகவும் ஆனால் கூடுதல் விலைக்கு விற்க முடியாமல் சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர். தற்போது இங்கு விநாயகர் சிலைகள் வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

தடை செய்யப்பட்ட ரசாயனம் இல்லை

இது குறித்து சிலை தயாரிக்கும் ராஜஸ்தான் மாநில ஊழியர்கள் கூறியதாவது:-சிலைகளை தயாரிக்்கும் போது தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை நாங்கள் பயன்படுத்துவதில்லை. முற்றிலும் மாவு பொருட்களை பயன்படுத்தி சிலைகள் தயார் செய்யப்படுகிறது. இந்த சிலைகளை தண்ணீரில் கரைத்தால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. . சிலைகளில் ராணுவ வீரர் விநாயகர், வாகனங்களில் செல்லும் விநாயகர் மற்றும் சிங்கம், புலி, எலி போன்ற விலங்குகள் மீது அமர்ந்து விநாயகர் காட்சியளிப்பது போல நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சிலைகளை ஏராளமானோர் பார்த்து செல்கிறார்கள். அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story