கியாஸ் குடோன் தீ விபத்து - உயிரிழந்தோதார் எண்ணிக்கை 3 ஆக உயர்வு


கியாஸ் குடோன் தீ விபத்து - உயிரிழந்தோதார் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
x

காஞ்சிபுரம் தேவேரியம் பாக்கத்தில் உள்ள தனியார் கியாஸ் குடோனில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவேரியம் பாக்கத்தில் உள்ள தனியார் கியாஸ் குடோனில் நேற்று முன்தினம் மாலை பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த சிலிண்டர்கள் வெடித்து அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது.

இந்த விபத்தில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் (வயது 51), அவரது மகள்கள் சந்தியா (21), பூஜா, நிவேதா, பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஆமோத்குமார் (25), குணால், சக்திவேல், அருண், கோகுல், தமிழரசன் உள்பட 12 பேர் உடல் கருகினர். அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஆமோத்குமார், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சந்தியா ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கியாஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் இன்று உயிரிழந்தார். இதனால் கியாஸ் குடோன் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது. மற்றவர்களின் உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கியாஸ் குடோன் தீ விபத்து தொடர்பாக ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து தொடர்பாக தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story