கடலூாில் தையல் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கடலூாில் தையல் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:45 PM GMT)

கடலூாில் தையல் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

கடலூர்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஏழை குழந்தைகளுக்கு இலவச சீருடை தைப்பதற்கான கூலியை ஆண்டுதோறும் 5 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். தையல் கூட்டுறவு பெண் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த சிக்கன சேமிப்புக்கான வட்டியை வழங்க வேண்டும். இலவச சீருடை தைக்கும் பெண்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் சமூக நலத்துறை அலுவலகம் முன்பு கடலூர் மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செம்மலர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கருப்பையன் கலந்து கொண்டு பேசினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் சங்கமேஸ்வரன், தையல் சங்க நிர்வாகிகள் ராஜமாணிக்கம், செந்தாமரை உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story