கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கஞ்சா விற்ற வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருநெல்வேலி
பேட்டை:
நெல்லையை அடுத்த பேட்டை சத்யா நகர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமையா மகன் தங்கராஜ் (வயது 44). இவர் பேட்டை பகுதியில் கஞ்சா விற்றது தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும் இவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
எனவே தங்கராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன், டவுன் உதவி கமிஷனர் விஜயகுமார், பேட்டை இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். இதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று, தங்கராஜை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடிதத்தை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் வழங்கினர்.
Related Tags :
Next Story