என்ஜினீயர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


என்ஜினீயர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

என்ஜினீயர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே கோனேரிபாளையத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் விமல் (வயது 31). சிவில் என்ஜினீயர். இவர் தனது மனைவியான ஹோமியோபதி டாக்டரை குடும்பத்தினருடன் சேர்ந்து அடித்து துன்புறுத்தியும், மானபங்கப்படுத்தியும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியும் வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விமலை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியின் பரிந்துரையை ஏற்று, விமலை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். இதையடுத்து விமலை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அதற்கான உத்தரவின் நகலை சிறை உயர் அதிகாரியிடம் போலீசார் வழங்கினர். விமலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, ஏட்டு பார்வதி ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.


Next Story