விநாயகர் சிலைகள் ஊர்வலம்


விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

மன்னார்குடியில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பாமணி ஆற்றில் கரைக்கப்பட்டன.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடியில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பாமணி ஆற்றில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 31 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தன.இந்த விநாயகர் சிலைகள் நேற்று மாலை மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் எதிரே உள்ள தேரடி பகுதிக்கு கொண்டுவரப்பட்டன.

இதனை தொடர்ந்து அங்கிருந்த இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநில செயலாளர் அரசு.ராஜா பேசினார். செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி தாளாளர் ஜெய்ஆனந்த் திவாகரன் கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பாமணி ஆற்றில் கரைப்பு

முன்னதாக இந்து முன்னணி நகர பொது செயலாளர் கென்னடி வரவேற்றார். இதில் மன்னார்குடி வர்த்தக சங்க அமைப்பு செயலாளர் எஸ்.எம்.டி. கருணாநிதி, சக்திவேல் கோட்டம் முருகன் கோவில் தர்மகர்த்தா என்.டி.ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இந்து முன்னணி நிர்வாகி ஞானம் நன்றி கூறினார். ஊர்வலம் மன்னார்குடி தேரடி தொடங்கி ராஜகோபாலசாமி கோவிலின் நான்கு வீதிகள் வழியாக வந்து கடைத்தெரு, மூன்றாம் தெரு வழியாக கீழப்பாலம் பகுதியில் உள்ள பாமணி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

போலீசார் பாதுகாப்பு

ஊர்வலத்தையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலசந்திரன், ராஜேந்திரன், இலக்கியா ஆகியோர் தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story