விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைப்பு


விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைப்பு
x

சின்னதாராபுரம்-நச்சலூர் பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

கரூர்

ஊர்வலம்

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்துமுன்னணி, இந்து மகாசபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சின்னதாராபுரம் மலைச்சூர் பிரிவு, பஸ் நிலையம், எம்.ஜி.ஆர்.நகர், ஒத்தமாதுறை, தேர்வீதி, நேரு நகர் போன்ற இடங்களில் 18 விநாயகர் சிலைகள் நிறுவி தினமும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.இதையடுத்து அனைத்து சிலைகளும் சின்னதாராபுரம் மலைச்சூர் பிரிவிற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் நேற்று முன்தினம் இரவு சின்னதாராபுரம் கடைவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சின்னதாராபுரம் அமராவதி ஆற்று பாலத்தில் இறக்கி வைக்கப்பட்டன. பின்னர் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பிறகு அமராவதி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதையடுத்து சின்னதாராபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

நச்சலூர்

நச்சலூர், நெய்தலூர், நெய்தலூர் காலனி, சேப்ளாப்பட்டி வடக்கு, மாடுவிழுந்தான் பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வந்தனர்.இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பூஜைகள் செய்யப்பட்டு அனைத்து சிலைகளும் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நச்சலூர் பகுதியில் உள்ள வாய்க்காலில் கரைக்கப்பட்டன. இதையொட்டி அந்த பகுதியில் குளித்தலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story