கோத்தகிரியில் விநாயகர் சிலை ஊர்வலம்


கோத்தகிரியில் விநாயகர் சிலை ஊர்வலம்
x
தினத்தந்தி 21 Sep 2023 7:45 PM GMT (Updated: 21 Sep 2023 7:45 PM GMT)

கோத்தகிரியில் விநாயகர் சிலை ஊர்வலம்

நீலகிரி

கோத்தகிரி

விநாயகர் சதுர்த்தி கடந்த 18-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில் அனுமன் சேனா சார்பில் நேற்று மாலை விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாநில தலைவர் சிட்கோ ராஜேந்திரன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து மேள, தாளத்துடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக வாகனங்கள் எடுத்து செல்லப்பட்டன. இதையொட்டி ஏராளமான போலீசார் மற்றும் ஊர்க்காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். விநாயகர் சிலைகள் டானிங்டனில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று உயிலட்டி கிராமத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்குள்ள நீர்வீழ்ச்சியில் சுமார் 45 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.


Next Story