பாண்டி பஜார் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் - 35 பேர் கைது


பாண்டி பஜார் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் - 35 பேர் கைது
x

சென்னை பாண்டி பஜாரில் பணம் வைத்து சூதாட்டம் நடத்திய 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை மாநகரம் முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை, சூதாட்டம் உள்ளிட்டவை நடைபெறும் இடங்கள் குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாண்டி பஜார் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் கடந்த 25-ந்தேதி பாண்டி பஜார் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாட்டம் நடத்திய 35 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சூதாட்டம் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் பணம், 780 சீட்டுக்கட்டுகள் மற்றும் 354 டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.



Next Story