ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்


ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
x
சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் கழுங்கு முனீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 3 குழுவினராக 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டை மானாமதுரை தொகுதி தமிழரசி எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டு விழாவில் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் ரவி பச்சமுத்து கலந்துகொண்டு மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் பார்வையாளர்களின் கரவொலிக்கு இடையே காளைகளை அடக்கி கட்டில், சேர், மின்விசிறி, சைக்கிள், தங்கம்-வெள்ளி நாணயங்கள், ரொக்கப்பரிசுகளை வென்றனர். இதேபோல் அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழுவினர் பரிசுப் பொருட்களை வழங்கினர்.ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


Related Tags :
Next Story