பிற்படுத்தப்பட்டவர்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்


பிற்படுத்தப்பட்டவர்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்
x

குழு மூலம் நவீன சலவையகங்கள் மற்றும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விரும்பும் பிற்படுத்தப்பட்டோர் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை,

குழு மூலம் நவீன சலவையகங்கள் மற்றும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விரும்பும் பிற்படுத்தப்பட்டோர் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நிதி உதவி

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறி வரும் சூழலுக்கு ஏற்ப, நவீன சலவையகங்கள் மற்றும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்கப்பட உள்ளது. இதன்படி, நவீன சலவையகங்கள் ஏற்படுத்த சலவை தொழில் தெரிந்த 10 நபர்களை கொண்ட குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சமும், ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்த தையல் தொழில் தெரிந்த ஆண் மற்றும் பெண் 10 நபர்கள் கொண்ட குழுவிற்கு ரூ.3 லட்சம் வீதமும் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

மேற்படி, குழுவினர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். உறுப்பினர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பயன்பெறலாம்

விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.

மேற்படி, திட்டத்தில் பயன்பெற விருப்பமும், தகுதியும் உள்ள குழுவினர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story