சுதந்திர போராட்ட புகைப்பட கண்காட்சி
வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் சுதந்திர போராட்ட புகைப்பட கண்காட்சி
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் நாட்டில் உள்ள 75 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டது. அங்கு வருகிற 23-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருச்சி கோட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நேற்று தொடங்கியது. விழாவுக்கு திருச்சி கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால் தலைமை தாங்கினார். முதுநிலை கோட்ட வணிக மேலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
ரெயில் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சுதந்திர தின விழா தொடர்பான புகைக்பட கண்காட்சியை கோட்ட மேலாளர் திறந்து வைத்து பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து. சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினரை கவுரவித்தனர். சுதந்திர போராட்டம் தொடர்பான நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.