வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள்


வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள்
x

வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

பெரம்பலூர்

தமிழ்நாடு வனத்துறையின் பெரம்பலூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட பெரம்பலூர் வனச்சரகம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் தேக்கு, கொய்யா, புங்கன், மகாகனி, வேம்பு, சவுக்கு மற்றும் பல இன மரக்கன்றுகள் வழங்கப்படும். நீர்ப்பாசன வசதி உள்ள விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். இலவச மரக்கன்றுகள் தேவைப்படும் பெரம்பலூர், பேரளி, குன்னம், மாத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 8838543275, சிறுவாச்சூர், ஆலத்தூர், செட்டிகுளம், காரை ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 9003771622, ரஞ்சன்குடி, லெப்பைக்குடிகாடு, அகரம்சீகூர், வி.களத்தூர், குரும்பலூர், புதுவேலூர், நக்கசேலம், டி.களத்தூர், அம்மாபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 9965659632, லாடபுரம், எசனை, மேலப்புலியூர், ஆலம்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 9655476094 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம், என்று பெரம்பலூர் வனச்சரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story