ஓட்டப்பிடாரம் அருகே இலவச மருத்துவ முகாம்


ஓட்டப்பிடாரம் அருகே இலவச மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 17 Oct 2023 12:15 AM IST (Updated: 17 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே இலவச மருத்துவ முகாம் நடந்தது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பவுண்டேஷன் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை ஹைச்.என்.யூ.பி பிரைமரி தொடக்கப் பள்ளியில் நடத்தின. முகாமிற்கு புதியம்புத்தூர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளை மேலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பவுண்டேஷன் அலுவலர் சவுந்தரபாண்டியன், பள்ளி செயலாளர் புலவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைவர் புதுராஜா தொடங்கி வைத்தார். புதியம்புத்தூர் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதில் 20 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story